திருப்பத்தூரில் பெரியகருப்பனை ஆதரித்து மின் வாரிய தொ.மு.ச. பிரசாரம்
திருப்பத்தூர் சட்ட மன்ற வேட்பாளராக போட்டியிடும் கே.ஆர்.பெரியகருப்பனை ஆதரித்து மின் வாரிய தொ.மு.ச.வினர் தீவிர பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.;
சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு மின்வாரிய மாவட்ட தொமுச சார்பில் மாவட்ட திட்ட செயலாளர் முருகேசன், தலைமையில் திட்ட தலைவர் ராமமூர்த்தி, கவுன்சில் செயலாளர் திருநாவுக்கரசு, திமுக நகரசெயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் திருப்பத்தூரில் உள்ள நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.
இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள்சிவகங்கை கோட்டதலைவர் முருகன் மற்றும் ஏராளமான தொமுச மின்வாரிய ஊழியர்கள் திரளாக கலந்துகொண்டனர்.