சிவகங்கை-திருப்பத்தூரில் பேரிடர் மேலாண்மை போலி ஒத்திகை பயிற்சி

சிவகங்கை திருப்பத்தூரில் மழை வெள்ள காலங்களில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்த பேரிடர் மேலாண்மை போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது;

Update: 2021-11-09 10:21 GMT

சிவகங்கையில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை போலி ஒத்திகை பயிற்சி 

திருப்பத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தின் சார்பாக கோட்டையூர் கண்மாயில் மழை வெள்ள காலங்களில் எவ்வாறு செயல்படுவது தப்பிப்பது பாதுகாப்பது மனித உயிர்கள் விலங்கினங்கள் உடமைகள் எவ்வாறு காப்பாற்றுவது போன்ற பேரிடர் மேலாண்மை போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

இது குறித்து பொதுமக்களுக்கு செயல்முறை விளக்கமாக காலி வாட்டர் பாட்டில், 20 லிட்டர் கேன், மரக்கட்டைகள், மற்றும் கயிறு கட்டி இழுப்பது, லைப் பாய், லைப் ஜாக்கெட், மரம் விழுந்து விட்டால் மரம் அறுக்க பவர் ஷா கொண்டு அதனை அகற்றுவது போன்ற செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது

இதில் நிலைய அலுவலர் சடையாண்டி தலைமையில் நிலைய எழுத்தர் ராஜா கண்ணன் மற்றும் குழுவினர்களால் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் பொதுமக்கள் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர், இது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருந்ததாக பொதுமக்கள் கூறினார்கள்.

தற்போது இந்த வடகிழக்கு மழையை முன்னிட்டு குழுவினர்கள் அனைவரும் தயார் நிலையில் உள்ளார்கள்

Tags:    

Similar News