பிரான்மலை கொடுங்குன்றநாதர் ஆலயத்தில் பரணி தீபம் ஏற்றிவைத்து பக்தர்கள் வழிபாடு

இந்த பகுதி மக்கள் மலை மீது ஏற்றப்படும் பரணி தீபத்தை கண்டபின்தான் தங்கள் இல்லத்தில் தீபமேற்றி வழிபடுவது வழக்கம்

Update: 2021-11-19 14:30 GMT

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகிலுள்ள பிரான்மலை கொடுங்குன்றநாதர் கோயில்

சிங்கம்புணரி அருகேயுள்ள பிரான்மலை கொடுங்குன்றநாதர் ஆலயத்தில் பரணி தீபம் ஏற்றிவைத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.  சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே புகழ்பெற்ற பிரான்மலை சுமார் 2500 அடி உயரமுள்ள மலையே லிங்கமாக வழிபடும் பிரான்மலையில் இன்று பக்தர்கள் முன்னிலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

குன்றக்குடி ஆதீனத்திற்குள்பட்ட ஐந்து கோவில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இந்த கொடுகுன்றநாதர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் குயிலமுதநாயகி உடனுறை அருள்மிகு ஸ்ரீகொடுகுன்றநாதர் ஆலயத்தில்  இந்த பரணி தீப வழிபாடு பிரசித்தி பெற்ற நிகழ்வாகும். இந்த விழாவில் இந்த பகுதி மக்கள் மலை மீது ஏற்றப்படும் பரணி தீபத்தை கண்டபின்தான் தங்கள் இல்லத்தில் தீபமேற்றி வழிபடுவது வழக்கம்.


திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலமான பறம்பு மலை என்ற இந்த மலை கடைஎழுவள்ளல்களில் ஒருவரான முள்ளைக்குத்தேர் கொடுத்த பாரி ஆண்ட மலை என கூறப்படுகிறது. கொடுங்குன்ற நாதர் ஆலயம் உள்ளது பாதாள லோகம், பூலோகம், கைலாசம் என்று மூன்று இடங்களில் அருள்பாலிக்கும் கொடுங்குன்றநாதர் 2500 அடி உயரமுள்ள பரம்புமலை மீது ஆகாயமாக காட்சி அளிக்கிறார். அங்கு குடிகொண்டிருக்கும் பால முருகன் ஆலயத்தில் பக்தர்கள் சார்பில் பரணி தீபம் ஏற்றிவைத்து அரோகரா கோஷம் எழுப்பப்பட்டது இதில் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுமார் பங்கேற்றனர்.

Tags:    

Similar News