ஓராண்டுக்குள் கொரோனா அழிந்துவிடுமாம்: அருள்வாக்கு கூறும் பெண் சித்தர்
ஓராண்டுக்குள் கொரோனா தொற்று அழிந்துவிடும் என சிவகங்கை திருப்பத்தூர் அருகே நீலமேகப்பட்டி கிராமத்தில் பெண்சித்தர் அருள் வாக்கு கொடுத்து உள்ளார்;
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை அருகே உள்ள நீலமேகப்பட்டி கிராமத்தில் ஓராண்டுக்குள் கொரோனா தொற்று அழிந்துவிடும் என பெண்சித்தர் அருள் வாக்கு கொடுத்து உள்ளார்.
சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை அருகே நீலமேகப்பட்டி கிராமத்தில் வசிப்பவர் மச்சக்காளை. இவரது மகள் அன்புச்செல்வி (39) இவர் கடந்த 15 ஆண்டுகளாக அருள் வாக்கு கொடுத்து வருகிறார். தெக்கூரில் திருமணம் செய்து வாழ்ந்து வந்த இவர் 10 ஆண்டுகள் கணவருடன் வாழ்ந்து வந்தார். பின்பு அவரை பிரிந்து இறை வழிபாட்டில் ஈடுபாடு கொண்டு தற்பொழுது பெண் சித்தராக மாறியுள்ளதால், இவரிடம் நாளொன்றுக்கு ஏராளமானோர் அருள்வாக்கு கேட்டு வருகின்றனர்.
கொரோனா தொற்றுநோய் பாதிப்பு குறித்தும் அது எப்பொழுது அழியும் என்பது குறித்தும் கேட்டபொழுது 15 ஆண்டுகளுக்கு இது போன்ற சிறு சிறு நோய் தொற்றுகளும், பாதிப்புகளும் வரும் என்றும், ஆனால் ஓராண்டுக்குள் இந்த கொரோனா தொற்று முடிவுக்கு வரும் என்றும் கூறினார்.