திருப்பத்தூரில் காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பு குடிநீர் சாக்கடையில் கலக்கும் அவலம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பு. குடிநீர் சாக்கடையில் கலப்பதை தடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருதுபாண்டியர் நகரில் முதல் வீதி சாலையில் காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு வாரமாக குடிதண்ணீர் சாக்கடையில் கலக்கும் அவல நிலை நீடிக்கிறது. திருப்பத்தூரில் குடிதண்ணீர் பிரச்னை உள்ள நிலையில் தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடி தண்ணீர் சாக்கடையில் கலந்து வீணாவதைத் தடுத்திட திருப்பத்தூர் நகராட்சி நிர்வாகமும் குடிநீர்வடிகால் வாரியமும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.