தக்காளிக்கும்,பா.ஜ.கவுக்கும் தொடர்பு உண்டா? உண்டுங்கறார் கார்த்தி சிதம்பரம்..!

பா.ஜ.கவின் தவறான பொருளாதார கொள்கையே தக்காளி விலை உயர்வுக்கு காரணம் என்கிறார் கார்த்தி சிதம்பரம்.

Update: 2021-11-26 10:29 GMT

விழிப்புணர்வு பிரச்சார பயணத்தில் பேசிய கார்த்தி சிதம்பரம்.

தக்காளி விலை உயர்வுக்கு பாஜகவின் தவறான பொருளாதாரக் கொள்கைதான் காரணம்  என்று கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டினார். 

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக மத்திய பாஜக அரசை கண்டித்து மக்கள் விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் துவக்கிவைத்து பேசினார். அப்போது பேசிய கார்த்திக் சிதம்பரம், தக்காளியின் விலை 180 ரூபாய் வரை உயர்ந்துவிட்டது. இந்த அவல நிலைக்கு காரணம் மத்தியில் ஆளும் பாஜக அரசுசின் தவறான பொருளாதாரக் கொள்கை முடிவுகள்தான் என குற்றம் சாட்டினார்.

மேலும் பிரதமர் மோடி புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றது, தேர்தல் தோல்வி பயத்தின் காரணமாகவே.   உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள விவசாயிகள் கண்டிப்பாக பாஜகவை தோற்க  அடிப்பார்கள். அதனால்தான்  வேளாண் சட்டங்கள் வாபஸ் பெற்று உள்ளதாக தெரிவித்தார். மேலும் மக்கள் சக்தியால் கண்டிப்பாக இந்த சர்வாதிகார அரசை தோற்கடிக்க முடியும் என்ற உறுதியோடு காங்கிரஸ் கட்சி செயல்படும் என்று கார்த்திக் சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்தார்.

Tags:    

Similar News