ஆவின் சேர்மன் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் வீட்டில் திருட்டு - கார் எரிப்பு
வீட்டில் நகைகள் எதுவும் இல்லை வீட்டில் இருந்த வெள்ளிப் பொருள்கள் எதுவும் திருடுபோகவில்லை;
ஆவின் சேர்மனும் அம்மா பேரவை மாவட்ட செயலாளருமான அசோகன் வீட்டில் 5.20 லட்சம் திருடப்பட்டதுடன் அவரது கார் எரிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கல்லுவயல் கிராமத்தில் சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்ட ஆவின் சேர்மனாகவும் மாவட்ட அம்மா பேரவை செயலாளராகவும் இருப்பவர் அசோகன். இவர் தேவகோட்டை தியாகிகள் சாலையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். தனது சொந்த ஊரான கல்லுவயல் கிராமத்திற்க்கு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று அதிகாலை வெடி சத்தம் கேட்டுள்ளது. அருகில் உள்ளவர்கள் வந்து பார்த்த போது வீட்டின் போர்டிகோவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இனோவா கார் எரிந்துகொண்டிருந்தது உடனடியாக அருகில் இருந்த தண்ணீரை கொண்டு தீயை கிராம மக்கள் அணைத்தனர் கார் முற்றிலுமாக கார் எரிந்தது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. கிராமத்தார் தேவகோட்டையில் இருந்த அசோகனுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே அவர் குடும்பத்தினர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பீரோவில் உள்ள பொருட்களும் சிதறி கிடந்தது. பீரோவில் வைத்திருந்த ரொக்கப்பணம் 5 லட்சத்து 20 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது. வீட்டில் நகைகள் எதுவும் இல்லை வீட்டில் இருந்த வெள்ளிப் பொருள்கள் எதுவும் திருடுபோகவில்லை பணத்தை கொள்ளையடித்து விட்டு வீட்டு போர்ட்டிகோவில் இருந்த இனோவா கார் பெட்ரோல் டேங்கில் துணியைச் சுற்றி தீ வைத்து எரித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து காரைக்குடி டிஎஸ்பி வினோஜி நேரில் பார்வையிட்டார். சோமநாதபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்