அரசியலுக்கு யாரும் வரலாம்: அதை ஏற்பதும் மறுப்பதும் மக்கள் கையில் உள்ளது

எல்லா கட்சிகளிலும் உள்ள நடைமுறையையே வைகோவும் பின்பற்றி இருக்கிறார் அதில் தவறில்லை என்றார் காங்.எம்பி திருநாவுக்கரசர்;

Update: 2021-10-24 22:30 GMT

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் அதை ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் மக்கள் கையில் உள்ளது என்றார் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், திருச்சி மக்களவை காங்கிரஸ்  உறுப்பினர் எஸ். திருநாவுக்கரசர்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் நடைபெற்ற மருதுபாண்டியர்கள் நினைவு தினத்தில் பங்கேற்ற பின்னர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது: எல்லா கட்சிகளிலும் உள்ள நடைமுறையைத் தான் வைகோவும் பின்பற்றி இருக்கிறார், அதில் தவறு ஒன்றும் இல்லை. திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை, முதலமைச்சர் ஸ்டாலின் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். ஊரக உள்ளாட்சித் தேர்தல் போல் நகர்புற தேர்தல் உட்பட அனைத்து தேர்தல்களிலும் திமுக, காங்கிரஸ் கூட்டணி என்றென்றும் தொடரும் என்றார் அவர்.


Tags:    

Similar News