வடுகபட்டி கிராமத்தில் ஒரே தெருவை சேர்ந்த 15 நபர்களுக்கு கொரோனா நோய்தொற்றுஉறுதி
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா, நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள வடுகபட்டி கிராமத்தில்ஒரே தெருவை சேர்ந்த 15 நபர்களுக்கு கொரோனா நோய்தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள வடுகபட்டி கிராமத்தில் வசித்து வரும் ஒரே தெருவை சேர்ந்த 15 நபர்களுக்கு கொரோனா நோய்தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அலுவலர் சகாய ஜெரால்டுராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
நோய்தொற்று பரவலை அடுத்து இப்பகுதியில் வசித்து வரும் சிறுவர்கள், ஆண்கள், பெண்கள் என மொத்தமாக 340 நபர்களுக்கு சுகாதார மையத்தின் சார்பில் முழுமையாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது . இதில் கடந்த இரண்டு தினங்களாக தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட பரிசோதனையில் 15 நபர்களுக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அமலுக்கு வந்துள்ள நிலையில் தற்சமயம் நெற்குப்பையில் ஒரே பகுதியைச் சேர்ந்த 15 நபர்களுக்கு நோய்தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இப்பகுதியில் வசித்து வரும் மக்களிடையே பெரும்அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது . மேலும் நோய் கண்டறியப்பட்ட உடன் பேரூராட்சி செயல் அலுவலர் ராமச்சந்திரன் தலைமையில் துப்புரவு பணியாளர்கள் பேரூராட்சி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அதற்கான முழு சுகாதார நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.