சிங்கம்புணரி அருகே ஆடு திருடியவர்களை கைது செய்த காவல்துறை

Update: 2021-07-09 12:04 GMT

சிங்கம்புணரி அருகே ஆடு திருடியவர்களை  காவல்துறையினர் கைது செய்தனர்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், எஸ்.புதூர் அருகே கரிசல்பட்டி பகுதியில் புழுதிபட்டி காவல்துறையினர் சப்- இன்ஸ்பெக்டர் நாசர் வழக்கமான ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அந்த வழியே ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் ஒரு ஆட்டுக்குட்டியுடன் சென்றுள்ளனர். சந்தேகத்தின் பேரில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர். உடனே அங்கிருந்து ஒருவர் தப்பி ஓடி விட்டார். மற்ற 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில், இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் திருமலைக்குடி கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் முருகேசன் (30), கவுனார்பட்டியைச் சேர்ந்த வீரையா மகன் மணிகண்டன் (22) ஆகியோரும், தப்பி ஓடியது திருமலைக்குடியை சேர்ந்த சிவா என்பதும் தெரிய வந்தது. மேலும் இவர்கள் கரிசல்பட்டி கிராமத்தை சேர்ந்த மன்சூர்அலி என்பவரது வீட்டில் புகுந்து ஆட்டை, திருடிக் கொண்டு வந்த போது காவல்துறையினரிடம் சிக்கியுள்ளனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.தப்பி ஓடிய சிவாவை புழுதிபட்டி காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Similar News