அரசு மருத்துவமனையில் கொரோனா மருத்துவப் பிரிவில் அமைச்சர் ஆய்வு.
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அமைச்சர் கலெக்டருடன் ஆய்வு.;
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கொரோனா மருத்துவப் பிரிவை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலெக்டருடன் ஆய்வு மேற்கொண்டார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அரசு மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்ட 65 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டியுடன் பார்வையிட்டார்.
இதில் 45 படுக்கைகள் ஆக்சிஜன் படுக்கைகளாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் தலைமை மருத்துவர் சாந்தி ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பனிடம் விளக்கினார்.
இந்நிகழ்ச்சியின் போது இணை இயக்குநர் டாக்டர் இளங்கோ மகேஷ்வரன், செவிலியர் கண்காணிப்பாளர் தனலெட்சுமி, செவிலியர்கள் அமுதா, கலா, மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்