தீ விபத்து : மரங்கள் எரிந்து நாசம்;

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே காரையூரில்

Update: 2021-05-14 08:30 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே காரையூரில் தோட்டத்தில் ஏற்பட்ட திடிர் தீ விபத்தால் பேரீச்சை மற்றும் சந்தன மரங்கள் எரிந்து நாசமாயின. 

திருப்புத்தூர் அருகே காரையூர் பகுதியில் மருத்துவர் ஜெகதீசன் என்பவரின் குடும்பத்தினருக்கு சொந்தமான, சுமார் 10 ஏக்கர் தோட்டத்தில் பேரீச்சம்பழம் மற்றும் சந்தனமரம் உள்ளிட்டவைகள் பயிரிடப்பட்டு வளர்த்து வந்தனர்.

இந்த தோட்டத்தில் திடீரென தீப்பிடித்தது. வெயில் காலம் என்பதால் காய்ந்த சறுகுகள் மற்றும் புட்கள் அதிக அளவில் இருந்தது. எனவே அதன் மீது மளமள வென தீ பிடித்து பின்பு பேரீச்சை மற்றும் சந்தன மரங்களில் நெருப்பு பரவியது.

இதுகுறித்து அப்பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் தோட்டத்தின் உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்க, பின்பு அவரால் திருப்புத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்த தீயை அணைத்தனர்.

இருப்பினும் சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான மரங்கள் தீயில் எரிந்து நாசமாயின.

தோட்டத்தின் மேலே மிகவும் தாழ்வாக சென்று கொண்டிருந்த, மின்கம்பி தோட்டத்திற்குள் அறுந்து விழுந்து கிடந்தது. எனவே இதன் மூலம், மின் கசிவு ஏற்பட்டு, தீ விபத்து நடந்திருக்கலாம் என கூறப்படுறது

Tags:    

Similar News