சிவகங்கையில் முத்தமிழ் ரதத்துக்கு அமைச்சர் உள்ளிட்டோர் வரவேற்பு
கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் வரவேற்று கலைஞர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்;
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர், நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, கலைஞர் புகழை போற்றிடும் வகையில், ”எழுத்தாளர் – கலைஞர்” குழுவின் சார்பில்,சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை புரிந்த ”முத்தமிழ்த்தேர்”அலங்கார ஊர்தியினை, ”எழுத்தாளர் – கலைஞர்”குழுவின் தலைவர் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், வரவேற்று, டாக்டர் கலைஞர்திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர், நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, “எழுத்தாளர் – கலைஞர்” குழுவின் சார்பில், சிவகங்கை மாவட்டத்திற்கு இன்று (14.11.2023) வருகை புரிந்த ”முத்தமிழ்த்தேர்” அலங்கார ஊர்தியினை, ”எழுத்தாளர் – கலைஞர்” குழுவின் தலைவர் மற்றும்
கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தலைமையில், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி ரவிக்குமார் முன்னிலையில், மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதியில், வரவேற்று தெரிவிக்கையில்,
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, அதனை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடிடும் நோக்கில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றாக, ”எழுத்தாளர் – கலைஞர்” குழுவின் சார்பில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் தமிழ்நாட்டிற்கு ஆற்றிய அரும்பணிகள் மற்றும் அவரது பரிமாணங்களை போற்றிடும் வகையில், பல்வேறு முன்னெடுப்புக்கள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அந்த வகையில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் புகழுக்கு புகழ் சேர்க்கின்ற வகையிலும், இன்றைய இளம் தலை
முறையினர்களுக்கு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர், பன்முகத்தன்மையை எடுத்துக்கூறும் வகையிலும், எழுத்தாளர் கலைஞர் குழுவின் சார்பில், கலைஞர் அவர்களின் புகழ் பாடும் ”முத்தமிழ்த்தேர்” அலங்கார ஊர்தி தயார் செய்யப்பட்டுள்ளது.
இவ்வூர்தியினை மிக நேர்த்தியான முறையிலும், கலைநயத்துடனும் திறன்மிக்க சிற்பியைக் கொண்டும், கூட்டுறவுத்துறைக்கென நியமிக்கப்பட்டுள்ள செய்தி மக்கள் தொடர்பு துறையைச் சார்ந்த அலுவலர் ஆகியோர்களின் துணை கொண்டு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இத்தருணத்தில், அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இந்த அலங்கார ஊர்தியின் வாயிலாக, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பன்முக ஆற்றலையும், அவர் தமிழ் சமூகத்திற்கு படைத்தளித்த மக்கள் நலத்திட்டங்களையும் தமிழகம் முழுவதும் பரைசாற்றுகின்ற வகையில் அனைத்து மாவட்டங்களுக்கு பயணிக்கின்ற வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த 04.11.2023 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில், ”முத்தமிழ்த்தேர்” அலங்கார ஊர்தி துவக்கி வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இந்த அலங்கார ஊர்தியானது பயணிக்கப்பட்டு, அதன்படி, இன்றைய தினம் (14.11.2023) நமது சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ளது. அதில், மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் இவ்வூர்தியானது தொடங்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட அரண்மனை வாசல் அருகிலும், திருப்பத்தூர் அண்ணா சிலை அருகிலும் மற்றும் காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபம் அருகிலும், இவ்வூர்தியானது காட்சிப்படுத்தப்பட உள்ளது.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, அவர்களின் புகழை போற்றுகின்ற வகையில், ”எழுத்தாளர் – கலைஞர்” குழுவின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நிகழ்வுகளில் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் படைப்புக்கள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என, ”எழுத்தாளர் – கலைஞர்” குழுவின் தலைவர் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.க.அர்விந்த்,மானாமதுரை நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, மானாமதுரை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் லதா அண்ணாதுரை, திருப்பத்தூர் பேரூராட்சித்தலைவர் சேங்கைமாறன், முன்னாள் அமைச்சர் தென்னவன், மானாமதுரை நகராட்சி ஆணையாளர் ரங்கநாயகி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.