இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்அமைச்சர் வழங்கல்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 6 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ள 1009 குடும்பங்களுக்கு ரூ. 30 லட்சத்தில் உதவிகள்;

Update: 2021-11-20 12:30 GMT

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே காரையூரில் உள்ள இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாம் வாசிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன். உடன் ஆட்சியர் மதுசூதனரெட்டி

இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே காரையூரில் அமைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன், சிவகங்கை மாவட்டத்தில் மொத்தமுள்ள ஆறு இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 1009 குடும்பங்களுக்கு சுமார் 30 லட்சம் மதிப்பிலான கேஸ் சிலிண்டர், பெட்சீட்கள்,வீட்டு உபயோகப் பொருட்கள், எவர் சில்வர் சாமான்கள் ஆகியவற்றை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி, மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.


Tags:    

Similar News