சிவகங்கை மாவட்டத்தில் ஜூன் 24 ல் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

Private placement camp on June 24 in Sivagangai district;

Update: 2022-06-21 10:00 GMT

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் வெள்ளி கிழமைகளில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

வருகின்ற 24.06.2022 அன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில், சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் ,வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வேலைநாடுநர்கள், இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி, தனியார், நிறுவனங்களில் வேலைவாய்ப்பினைப் பெறலாம்.

மேலும், இம்முகாமில் இலவச திறன்பயிற்சிக்கான விண்ணப்ப படிவம், போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் மாணவர் சேர்கை மற்றும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருந்து பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து வருபவர்களுக்கு உதவித் தொகைக்கான விண்ணப்பமும் வழங்கப்படுகிறது. எனவே, விருப்பமுள்ள பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் தொழிற் பயிற்சி பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் தங்களது கல்விச் சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டையுடன்; இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

முகாம் மூலம், பணி வாய்ப்பு பெறுவோருக்கு பதிவு மூப்பு ஏதும் ரத்து செய்யப்படாது. மேலும், இம்முகாமில் பங்கேற்பவர் கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றி கலந்து கொண்டு பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News