ஆபத்தை உணராமல் தடுப்பணையில் உச்சியிலிருந்து தண்ணீரில் குதிக்கும் இளைஞர்கள்
வைகை ஆற்றங்கரையோரம் உள்ள கிராம மக்கள் பள்ளி மாணவர்களிடம் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்;
ஆபத்தை உணராமல் தடுப்பணையில் உச்சியில் நின்று தண்ணீரில் குதிக்கும் இளைஞர்கள்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வழியாக செல்லும் வைகை ஆற்றில் ஆதனூர் கிராமம் அருகே தடுப்பு அணை கட்டப்பட்டுள்ளது. இப்போது வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் வேகமாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், வைகை ஆற்றை சுற்றியுள்ள கிராமபுரத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் ஆபத்தை அறியாமல், தடுப்பணையில் உச்சியில் நின்று தண்ணீரில் குதித்து குளிக்கிறார்கள். இதனால் உயிர் சேதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. வைகை ஆற்றங்கரையோரம் உள்ள கிராமப்புறங்களில் வசிக்கும், பெற்றோர் மற்றும் பள்ளி மாணவர்களிடம் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.