மின்கம்பிகள் உரசுவதால் ஏற்படும் மின்தடையை புதிய உத்தியில் சரி செய்த இளைஞர்கள்

வயல் வெளியில் செல்லும் மின் கம்பியில் பிளாஸ்டிக் பைப் மற்றும் கல்லையும் கட்டி தொங்க விட்டு மின் தடையை சரி செய்துள்ளனர்;

Update: 2022-01-25 08:30 GMT

மின்கம்பிகள் உரசுவதால் ஏற்படும் மின்தடைக்கு தற்காலிக தீர்வு கண்ட  பழையனூர் கிராமத்தினர்

பழையனூர் கிராமத்தில் மின்கம்பிகள் உரசி ஏற்படும் மின்தடையை சரி செய்ய அந்த கிராமத்து இளைஞர்களின் புதிய யோசனை மூலம்  மின் கம்பியில்  கல்லை கட்டி தொங்கவிட்டு தற்காலிக தீர்வு கண்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே பழையனூர் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக சாலையின் அருகே உள்ள வயல் வெளியில் உள்ள இரண்டு மின் கம்பிகள் தாழ்வாக சென்றதால் இரு கம்பிகள் அடிக்கடி உரசி மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இது குறித்து மின்வாரிய ஊழியர்களிடம் பல முறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் இந்த ஊர் இளைஞர்கள் வயல் வெளியில் செல்லும் மின் கம்பியில் பிளாஸ்டிக் பைப் மற்றும் கல்லையும் கட்டி தொங்க விட்டு மின் தடையை சரி செய்துள்ளனர். இளைஞர்களின் இந்த வித்தியாசமான முயற்சியால் மின்தடை நீங்கி சீரான மின்சாரம் சென்று வருகிறது. ஆனால் மின் வாரிய ஊழியர்கள் இதனை இன்று வரை சரி செய்த பாடில்லை.

Tags:    

Similar News