மணல் லாரியை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டம்
பூவந்தி அருகே மணல் லாரிகள் சென்று வருவதால், கண்மாய் நீர்வரத்து கால்வாயில் மண் சரிந்து நீர் வரத்து இல்லாமல் போனது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் பூவந்தியிலிருந்து சிவகங்கை செல்லும் வழியில் மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் மணல் குவாரி ஒன்று இயங்கி வருகிறது அங்கிருந்து தினமும் 10 லாரிகளுக்கு மேல் மணல் ஏற்றிக்கொண்டு சிவகங்கை பூவந்தி சாலையில் வந்து திரும்பிச் செல்லும்
அந்த ரோட்டிற்கு வருவதற்கு முன்பு குவாரியில் இருந்து வரும் வழியில் ஏனாதி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கண்மாய்களுக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய் உள்ளது . லாரிகள் சென்று வருவதால் அந்த கால்வாயில் மணல் சரிந்து நீர் வரத்து இல்லாமல் போனது.
அதனால் ஏனாதியைச் சுற்றி உள்ள கிராம மக்கள் அனைவரும் அந்த வழியாக வரும் மணல் லாரிகள் அனைத்தையும் மறைத்து மறியல் செய்தனர், அதன்பின்பு குவாரி நடத்தும் நபர்கள் வந்து கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அந்த கால்வாயை தூர்வாரி கொடுத்துவிடுவோம் என்று உறுதியளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது