உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களை பத்திரமாக மீட்க வலியுறுத்தல்

உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களை பத்திரமாக மீட்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Update: 2022-02-25 08:30 GMT

உக்ரைனில் சிக்கி தவிக்கும் மானாமதுரையை சேர்ந்த மருத்துவம் படிக்கும் மாணவியை பத்திரமாக மீட்க வேண்டும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கிருஷ்ணாரஜபுரம் பகுதியை சேர்ந்தவர்  பாண்டி . இவரது மகள் பார்கவி . இவர் உக்ரைன் நாட்டில் உள்ள கார்கிவ் நேஷனல் மருத்துவ கல்லூரியில் 5 - ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார்.இந்த நிலையில் ரஷியா - உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் காரணமாக அங்கு படிக்கும் இந்திய மாணவிகளை மீட்டு வர வேண்டும் என அவர்களின் பெற்றோர் இந்திய அரசிற்கு கோரிக்கை விடுத் துள்ளனர் .

இந்தநிலையில் அங்குள்ள நிலைமை குறித்து உக்ரைன் நாட்டில் இருந்து மானாமதுரை மாணவி பார்கவி வீடியோகால் மூலம் கூறியதாவது : தற்போது வரை எந்த பிரச்னையும் இங்கு இல்லை . நேற்று அதிகாலை பயங்கரமான சத்தம் கேட்டது . எல்லையில்நடக்கும் போர் என கேள்விபட்டோம் . மேலும் இங்கு உணவு மற்றும் தண்ணீர் , ஆவணங்கள் ஆகியவற்றை பத்திரமாக வைத்து கொள்ளவேண்டுமென உக்ரைன் அரசு கூறியுள்ளது .

இந்த பதற்றமான நிலையில் உக்ரைன் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் மூலம் எங்களை மீட்டு இந்தியா கொண்டு சேர்ப்பார்கள் என நம்புகின்றோம் . மேலும் எங்களுக்கு உக்ரைன் ராணுவம் முழு பாதுகாப்பு வழங்கி வருகிறது என்று அவர் கூறினார் . இது குறித்து மாணவியின் தாய் போதும்பொண்ணு மற்றும் தங்கை தர்சிகா ஆகியோர் கூறுகையில், மத்திய , மாநில அரசு உடனடியாக தலையிட்டு உக்ரைன் நாட்டில் உள்ள இந்திய மாணவ மாணவிகளை அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் உக்ரைனில் சிக்கித்தவிக்கும் தமிழக மாணவர்களை பத்திரமாக சிறப்பு விமானம் மூலம் மீட்க வேண்டுமென  பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News