திருப்புவனம் வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
திருப்புவனம் பைபாஸ் சாலை அருகில் திருப்புவனம் வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.;
சடலத்தை மீட்டு விசாரணை நடத்தும் போலீசார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பைபாஸ் சாலை அருகில் திருப்புவனம் வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருப்புவனம் பைபாஸ் சாலை அருகில் பாக்யா நகர் அருகே உள்ள வைகை ஆற்றில் உடல் முழுவதும் எரிந்த நிலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக திருப்புவனம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்புவனம் போலீசார், தடயங்களை சேகரித்து எரிந்த நிலையில் கிடந்தவர் யார் என்றும், அவர் எரித்துக் கொலை செய்யப்பட்டு உள்ளாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.