அபராதம் விதிக்கும் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள்..
பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள்;
மானாமதுரையில் பைபாஸ் சாலையில் ஒரு மணி நேரம் பேருக்கு அபராதம் விதிக்கும் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் பொருட்கள் வாங்க முடியாமல் திரும்பிச் சென்ற பொதுமக்கள்.
கொரோனா வின் இரண்டாம் கட்ட அலை வேகமாக பரவி வருவதால் தமிழ்நாடு அரசு பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது இதை மீறுபவர்கள் மீது காவல் துறையும் போக்குவரத்து துறை அதிகாரிகளும் அபராதம் விதித்து வருகின்றனர் 10 தேதி முதல் 24ம் தேதி வரை நோயை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 12 மணிக்குள் அன்றாட தேவையான பொருட்களை வாங்கிச் செல்ல கிராமங்களில் உள்ள மக்கள் மானாமதுரை பகுதியில்
வந்து பொருட்களை வாங்கிச் செல்கின்றனர் இதை அறிந்த போக்குவரத்து காவல்துறையினர் இந்த மாத டார்கெட் கடந்த மாதத்தை விட குறைவாக இருப்பதால் அபராதம் என்ற பெயரில் மானாமதுரை பைபாஸ் புறவழி சாலையில் நின்று கொண்டு உயர் அதிகாரிகளின் உத்தரவின் பெயரில் ஒரு மணி நேரம் மட்டும் கடமைக்கு அபராதம் விதித்து வருகின்றனர் இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அரசு அறிவித்துள்ளது இதனால் எங்களின் அன்றாட தொழில் மிகவும் பாதிக்கப்பட்டு
அன்றாட வருமானத்தை தொலைத்துவிட்டோம் உணவிற்கே தற்போது கஷ்டப்படும் நிலைமை உருவாகிவிட்டது இருக்கும் பணத்தை வைத்து அன்றாட தேவைக்காக பொருட்களை வாங்கி வருகிறோம் அதிலும் இது போன்று போக்குவரத்து காவல்துறையினர் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதால் பொருட்கள் வாங்க முடியாமல் திரும்பி செல்கிறோம் என்றும் அவர்களிடம் முறையான காரணம் தெரிவித்தால் எங்களை கடுமையான வார்த்தைகளால் பேசிவிடுவதாகவும் வேதனையுடன் தெரிவித்தனர்