திதி, தர்ப்பணத்துக்கு தடை; வைகை ஆற்றில் பொதுமக்களை தடுத்து நிறுத்திய போலீசார்
வைகை ஆற்றுக்குள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வந்த பாெதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பினர்.;
வைகை ஆற்றுக்கு செல்வோரை தடுப்பு அமைத்து திருப்பி அனுப்பும் போலீசார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வைகை ஆற்றில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க மதுரை, சிவகங்கை விருதுநகர் போன்ற மாவட்டங்களில் இருந்து ஆடி அமாவாசைக்கு இங்கு வருவார்கள். இங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் வழங்கி வைகை ஆற்றில் நீராடி புஷ்பவனேஸ்வரரை தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள்.
ஆனால் தொடர்ந்து இரண்டு வருடமாக கொரானோ வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வைகை ஆற்றில் திதி, தர்ப்பணம் நிகழ்வு நடைபெறவில்லை. இதனால், திதி, தர்ப்பணம் செய்யும் புரோகிதர்கள் யாரும் வைகை ஆற்றிற்கு வராததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள்.
இருப்பினும் ஒருசில பக்தர்கள் வைகை ஆற்றில் குளித்து விட்டு கோவில் வாசலில் விளக்கு ஏற்றி புஷ்பவனேஸ்வரரை தரிசனம் செய்து விட்டு சென்றனர். போலீசார் வைகை ஆற்றிற்கு செல்லும் வழியில் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்கள் கூட்டம் இல்லாததால் திருப்புவனம் வைகையாறு வெறிச்சோடி காணப்பட்டது.