சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி 3 முறை ஒத்திவைத்து 4 -ஆவது முறையாக நடந்த தேர்தல்
தலைவர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியில் வெற்றி பெற்று திமுகவில் சேர்ந்த சின்னையா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்;
சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி ஏற்கெனவே 3 முறை ஒத்திவைக்கப்பட்ட திருப்புவனம் ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் 4 -ஆவது முறையாக இன்று நடந்த தேர்தலில் திருப்புவனம் ஒன்றியக்குழுத் தலைவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 17 வார்டுகளில் அதிமுக 3, தமாகா 2 என அதிமுக கூட்டணி 5 இடங்களிலும், திமுக 6, காங்கிரஸ் 2 என திமுக கூட்டணி 8 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்கள் அமமுக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றனர். இந்நிலையில், தலைவர் துணைத்தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக கவுன்சிலர்கள் கடத்தல், சட்டம் ,ஒழுங்கு உள்ளிட்ட காரணங்களால் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் கடந்த மூன்று முறையும் ஒத்தி வைக்கப்பட்டது. இன்று காலை தலைவர் பதவிக்கும், மாலை துணைத் தலைவர் பதவிக்கும் 4-வது முறையாக தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. இதில், தலைவர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியில் வெற்றி பெற்று திமுகவில் சேர்ந்த சின்னையா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.