தை அமாவாசையொட்டி திருப்புவனம் வைகையாற்றில் முன்னோர்களுக்கு வழிபாடு
திருப்புவனம் வைகை ஆற்றில் தை அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
திருப்புவனம் வைகை ஆற்றில் தை அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே உள்ள திருபுவனம் நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சௌந்தரநாயகி அம்மன் சமேத ஸ்ரீ புஷ்பவனேஸ்வரர் சுவாமி திருக்கோவில் தை அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் எதிரில் உள்ள வைகை ஆற்றில் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
நம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க சிறந்த நாளான தை அமாவாசை திரு நாளான இன்று அதிகாலை முதல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கானோர் வைகை ஆற்றில் வரிசையாக அமர்ந்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். இந்த நாள் முன்னோர்களை நினைத்து வணங்கி அவர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தால் இதன்மூலம் நமது முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.
பித்ரு லோகத்தில் உள்ள நமது முன்னோர்கள் தட்சிணாயாண புண்ணிய காலமான ஆடி அமாவாசை நாளில் பூவுலகத்திற்கு வந்து புரட்டாசி மாதத்தில் மகாளாய பட்ச காலத்தில் நம்முடனே இருந்து உத்தராயாண புண்ணிய காலமான தை மாதத்தில் வரும் அமாவாசை நாளில் நம்மை ஆசிர்வதித்து மீண்டும் பிதுர் லோகத்திற்கு திரும்பி செல்வதாக ஐதீகம். தை அமாவாசை தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும்.
தை அமாவாசை தர்ப்பணம்:
அமாவாசை அன்று முன்னோர்கள் ஆத்ம சாந்திக்காக செய்யப்படும் திதி, தர்ப்பண பூஜையானது, நம்முடைய வம்சாவழியினருக்கு பெரிதும் நலம் தரும். தர்ப்பணம் என்பது எள்ளும், நீரும் கொண்டு தரப்படுவதாகும். இந்த தர்ப்பண நீரின் சக்தியானது, பூமியின் ஆகர்ஷன சக்தியை மீறி, மேல்நோக்கி எழும்பிச் சென்று, பல கோடி மைல்களுக்கு தொலைவில் உள்ள பித்ரு லோகத்தை அடையும். தை அமாவாசையன்று, இந்த சக்தியானது மிகவும் அபரிமிதமாக பெருகுகிறது. தர்ப்பணம் அளிப்பவர்களின் வீட்டில் தடைகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.
பிரசித்தி பெற்ற இத்தலத்தில் ஏராளமானோர் வைகை ஆற்றில் புனித நீராடி சிவாச்சாரியார்கள் தலைமையில் தர்ப்பணம் பூஜை செய்து வழிபட்டனர். நிறைவாக வைகையாற்றின் கரையில் அமைந்துள்ள சிவசக்தி நந்தி விநாயகர் வழிபட்டனர் தொடர்ந்து புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றி சுவாமி அம்மனை வழிபட்டனர்.