'மாவட்ட ஆட்சியரே என்கையில்' என்று சொல்லி அரசு அதிகாரியே மணல் கடத்தல் : நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை
மாவட்ட ஆட்சியரே என்கையில் எனக்கூறி மணல் கடத்தலில் அரசு அதிகாரி ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் வசிப்பவர் குமேரசன். இவர் ராமநாதபுரம் சிவகங்கை மாவட்ட ஆட்சியரும் இளையான்குடி காவல்துறையும் என் பாக்கெட்டில் என்று பீலாவிட்டு உயர் அதிகாரிகளுக்கு கெட்டபெயர் உண்டாக்கும் வகையில் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகிறார். குமரேசன் மீது ராமநாதபுரம் சிவகங்கை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் அரியாண்டிபுரம் கிராம ஊராட்சிமன்ற தலைவியின் கணவரும், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மை உதவி இயக்குனராக பணிபுரியும் குமரேசன் என்பவர் இவ்வாறு கூறிக்கொண்டு மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகிறார். கிராம மக்களை மிரட்டி வருவதாகவும் மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்கள்.
அரசு வாகனமான ஜேசிபியை கொண்டு திருட்டு மணல் அள்ளி விற்பனை செய்துவருவதாக கூறப்படுகிறது. மணல் அள்ளுவதை தடுக்க சென்றவர்களை, அடியாட்களை கொண்டு கொலைமிரட்டல் விடுத்து வருகிறார். இவர் மீது மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.