கணவருடன் தகராறு: தற்கொலைக்கு முயன்ற பெண்

கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மானாமதுரை வைகை ஆற்றில் மூழ்கி தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய போலீசார்

Update: 2021-11-28 06:23 GMT

வைகை ஆற்றில் தற்கொலைக்கு முயன்ற பெண்

மானாமதுரை பிருந்தாவனம் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி மல்லிகா (35) கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த மல்லிகா மானாமதுரையில் காவல்நிலையம் அருகே வைகை ஆற்றுக்குள் இறங்கி இரு கரைகளையும் தொட்டுச்செல்லும் வெள்ள நீரில் ஆழமான பகுதிக்குச் சென்றார்.

இதைக் கவனித்த மானாமதுரை காவல் நிலைய போலீசார் பாலமுருகன், ராஜேஷ் ஆகியோர் வெள்ள நீரில் இறங்கி மல்லிகாவை சமாதானம் செய்து அவரைக் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அதன் பின்னர் காவல் நிலையத்திற்கு கூட்டிச்சென்று மல்லிகாவிடம் தற்கொலைக்கு முயற்சி செய்யமாட்டேன் என எழுதி வாங்கிகொண்டு, அவரது கணவர் ஆனந்தனை போலீசார் கண்டித்து மல்லிகாவை அவருடன் அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News