வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகள்: பஸ்ஸை விட்டு இரங்கி சென்ற டிரைவர், கண்டக்டர்

திருப்புவனத்தில் வாக்குவாதம் செய்த பயணிகள் பேருந்தை நிறுத்தி விட்டு இறங்கி சென்ற ஓட்டுநர், நடத்துனரால் பரபரப்பு.

Update: 2021-11-24 10:15 GMT

பாதியில் இறக்கி விடப்பட்ட பயணிகள்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்கு செல்லும் அரசு டவுன் பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டு வருவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருப்புவனம் அரசு கிளைபணிமனை மூலம் 153 கிராமங்களுக்கு 44 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இது தவிர மதுரை கோட்டம் மூலமாகவும் டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. சில நாட்களாக கல்லூரணி வேம்பத்தூர் செல்லும் டவுன் பஸ்கள் காலை வேளையில் இயக்கப்படவில்லை. நேற்று முன்தினம் காலை திருப்புவனத்தில் இருந்து கிளம்பிய TN58 N1840 கொண்ட டவுன் பஸ்ஸில் வேம்பத்தூர் பயணிகள் டிக்கெட் கேட்டபோது கண்டக்டர் தர மறுத்துள்ளார்.

திருப்பாச்சேத்தி வரை தான் பஸ் செல்லும் என தெரிவித்துள்ளார். இதனால் பயணிகள் வாக்குவாதம் செய்யவே கண்டக்டரும் டிரைவரும் பஸ்சை நிறுத்தி விட்டு கீழே இறங்கி சென்று விட்டனர். இதனால் கிராமங்களுக்குச் செல்லும் பஸ்கள் முன்னறிவிப்பின்றி நிறுத்தப்படுவதால் அதனை நம்பியுள்ள மாணவர்கள் பெரிதும் சிரமப்படுவதாக பயணிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News