தெற்கு கீரனூர் அருள்மிகு வரத கணபதி திருக்கோயில் மகா சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
சங்கடகரசதுர்த்தியையொட்டி 32 விநாயகர், வரத கணபதிக்கு மஞ்சள், பால், தயிர் தேன் உள்ளிட்ட 16 வகை அபிஷேகம் நடந்தது
தெற்கு கீரனூர் அருள்மிகு வரத கணபதி திருக்கோயில் மகா சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள தெற்கு கீரனூர் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு வரத கணபதி விநாயகர் திருக்கோவில் கார்த்திகை மாத மகா சங்கடஹர சதுர்த்தி திருநாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன. திருக்கோவிலில் சிறப்பு அம்சமாக மூலவர் அதனை சுற்றியும் ஸ்ரீ பால கணபதி, ஸ்ரீ சங்கட ஹர ஸ்ரீ தருண கணபதி, ஸ்ரீ பக்தி கணபதி, ஸ்ரீ வீர கணபதி, ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி, ஸ்ரீசித்தி கணபதி, ஸ்ரீ விக்ன கணபதி உள்ளிட்ட 32 விநாயக பெருமான் அமர்ந்த நிலையில் அருள்பாலித்து வருகிறார்கள்.
சங்கடகர திருநாளையொட்டி 32 விநாயகர் மற்றும் மூலவர் வரத கணபதி சுவாமிக்கும் திருமஞ்சனம் பொடி மஞ்சள் பால் தயிர் பஞ்சாமிர்தம் தேன் சந்தனம் உள்ளிட்ட 16 வகையான நறுமண திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து, அருகம்புல் கொண்டு அர்ச்சனைகள் செய்து சிறப்பு பூஜைகள் நடந்தன. இதனை அடுத்து 32 விநாயகப் பெருமானுக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நிறைவாக மூலவர் வரத கணபதிக்கு மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயக பெருமானை வழிபட்டனர்.