மடப்புரம் கோவில் உண்டியல் திறப்பு: ரூ.27லட்சம் ரொக்கம், தங்கம், வெள்ளி காணிக்கையாக கிடைத்தது
பக்தர்களின் காணிக்கையாக ரூ.27லட்சம் ரொக்கமும், 196 கிராம் தங்கமும், 256 கிராம் வெள்ளியும் கிடைத்துள்ளது.;
மடப்புரம் காளி கோவிலில் பக்தர்களின் உண்டியல் காணிக்கை ரூ.27லட்சம் ரொக்கமும்,196 கிராம் தங்கமும்,256 கிராம் வெள்ளியும் கிடைத்தது
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தில் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. தென்மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து நேர்த்திக்கடன் நிறைவேற்றி உண்டியலில் காணிக்கை செலுத்திச்செல்வது வழக்கம்.
இந்நிலையில்,பரமக்குடி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவலிங்கம் தலைமை யில், மடப்புரம் கோவில் உதவி ஆணையர் செல்வி, அறங்காவலர் குழு தலைவர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலையில் கோவிலின் உண்டியல்கள் திறக்கப்பட்டு என்னும் பணி நடைபெற்றது.உண்டியலில் ரொக்கம் ரூ.27,05726, தங்கம் 194 கிராம், வெள்ளி 256 கிராம் இருந்தது தெரியவந்தது.