சிவகங்கையில் கோலாகலமாக நடந்த குப்பி திருவிழாவில் 3 கிராம மக்கள் பங்கேற்பு
சிவகங்கையில் கோலாகலமாக நடந்த குப்பி திருவிழாவில் 3 கிராம மக்கள் பங்கேற்றனர்.
சிவகங்கை அருகே உள்ள மேற்கு வாணியங்குடி கிழக்கு வாணியங்குடி மற்றும் மறவர் பகுதி மக்கள் வருடந்தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குப்பி திருவிழா கொண்டாடுவது வழக்கம்.
அதேபோல் இந்த வருடம் பொங்கல் முடிந்து ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் இன்று கொண்டாடப்பட்டது.
இதில் மூன்று கிராம மக்கள் கலந்து கொண்டனர். இந்த குப்பி திருவிழாவில் பெண்கள் தலையில் சொம்புவில் பூக்கள். ஆவாரம் பூ, மா இலை. போன்றவைகளை வைத்து தலையில் சுமந்தபடி முக்கிய தெரு வழியாக ஊர்வலமாக வந்து வாணியங்குடி அருகே உள்ள குளத்தில் கரைத்தனர்.
இந்த திருவிழாவில் மூன்று கிராம மக்கள் திரளாக கலந்துகொண்டு ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்