கிருதுமால் நதியில் நீர்திறப்பு:30 ஆண்டுகளாக சிரமத்தைச்சந்திக்கும் கிராம மக்கள்

இந்த இடத்தில் உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக போராடி வருகிறோம் இன்று வரை தீர்வு கிடைத்தபாடில்லை

Update: 2021-11-24 06:15 GMT

தரைமட்டப்பாலம் நீரில் முழ்கிவதால் 30 வருடங்களாக தண்ணீர் வந்ததால்   நீரில் கடந்து செல்லும் கிராம மக்கள்

கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்கப்படுவதால்  பழையனூர் சாலை போக்குவரத்து துண்டிக்கப்படுவதால்  நேரில் செல்லும் தரைமட்டப்பாலம் நீரில் முழ்கிவதால் 30 வருடங்களாக தண்ணீர் வரும் நாட்களில் கிராம மக்கள் விருதுநகரைச் சுற்றி செல்லும் நிலை தொடர்கிறது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து சிவகங்கை விருதுநகர் மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது . இதனால்,  பழையனூரைச் சுற்றிலும் ஓடாத்துார் , வல்லாரேந்தல் , எஸ்.வாகைகுளம், வழியாக சிறுவனூர்,சேந்தநதி உள்ளிட்ட 12 கிராமங்களைச் சேர்ந்த மக்கள்  உள்ளன.சிவகங்கை மாவட்டம் மட்டுமல்லாது விருதுநகர் மாவட்ட கிராமங்களும் உள்ளன கிராம மக்கள் உரம் , விதை நெல் , காய் கறி உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் பழையனூரை நம்பியே உள்ளனர். அரசு பள்ளி,ஆரம்ப சுகாதார நிலையம் என அனைத்து தேவைகளுக்கும் பழையனூர் வந்து செல்கின்றனர் பழையனூர் வழியாக இரண்டு அரசு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.



கிருத்துமால் நதியில் தண்ணீர் திறக்கக்கப்பட்டதை அடுத்து பழையனூர் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கிய போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால்,  டூவீலர்,சரக்கு வாகனங்கள் நீரில் பாதியளவு மூழ்கியபடி சென்று வருகின்றன பஸ் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் 200க்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வல்லாரேந்தல் கிராமத்தை சேர்ந்த சங்கரலிங்கம் கூறியதாவது:  கிருத்துமால் நதியில் வருடத்திற்கு இரண்டு மாதங்கள் தண்ணீர் தேங்கி நிற்கும், இந்த இடத்தில் உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக போராடி வருகிறோம் இன்று வரை தீர்வு கிடைத்தபாடில்லை. மூன்று நாட்களாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது என்றார்.

வல்லாரேந்தல் கருப்புசாமி கூறியதாவது:   30 ஆண்டுகளாக தண்ணீர் வரும் பொழுது இந்த பிரச்னை இருந்து வருகிறது 30 கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் விருது நகரைச் சுற்றி பழையனுர் செல்ல வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கும் 5 கிலோ மீட்டர் சுற்றி பள்ளிக்கு செல்கின்றனர்.  மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளும் செல்ல முடியாத சூழல் நிலவுகிறது.  எனவே,  கிராம மக்களின் கோரிக்கை ஏற்று எங்களுக்கு  உயர்மட்டப் பாலம் அமைத்து கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

Tags:    

Similar News