பூவந்தி கிராமத்தில் பாரம்பரிய பொங்கல் பானை தயாரிக்கும் பணி தீவிரம்

கடந்த 3 மாதகாலமாக தொடர் மழை காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது தான் தொழிலாளர்கள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்

Update: 2022-01-01 15:28 GMT

சிவகங்கை அருகே  பூவந்தியில் தயாரிக்கப்படும் மண் பானைகள்

பூவந்தி கிராமத்தில் பாரம்பரிய பொங்கல் பானை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சிவகங்கை மாவட்டம், பூவந்தி கிராமத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் பானைகள் தயாரிக்கப்பட்டு, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, காரைக்குடி, நாட்டரசன்கோட்டை, தேவகோட்டை, திருவாடானை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் பானைகள் கால்படி அரைப்படி ஒரு படி அளவுகளில் பொங்கல் பானைகள் தயாரிக்கப்பட்டு ரூபாய் 50 முதல் 150 வரை விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த 3 மாதகாலமாக தொடர் மழை காரணமாக மண்பாண்டம் தயாரிப்பு பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது தான் தொழிலாளர்கள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

கண்மாய்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பானை தயாரிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு இன்னல்களை தொழிலாளர்கள் சந்தித்து வருவதாக தெரிவித்தனர்.  பூவந்தி கிராமத்தில் பெரும்பாலானோர் பானைகள், மண் சட்டிகள், மீன்சட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. தற்போது வரும் பொங்கலுக்காக மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப பொங்கல் பானை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றோம். கடந்த 3 மாதமாக பெய்த பலத்த மழையினால் பானை தயாரிப்பு தொழில் தொடங்கி இருந்த நிலையில், தற்போது தயாரிப்பு பணிகளில் தீவிரமாக காட்டி வருகின்றோம். இருப்பினும் கண்மாய்கள் அளவுக்கு அதிகமாக தண்ணீர் தேங்கி உள்ளதால் களிமண் எடுப்பதிலும் சிரமம் உள்ளது. ஏற்கெனவே களிமண் வங்கி இருப்பு வைத்து இருந்த காரணத்தை வைத்து தற்போது பானைகள் தயாரிக்கப்பட்டு வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

அதேபோல் பெண் தொழிலாளி கூறுகையில், 40 ஆண்டுகளாக இந்த தொழிலில் செய்து வருகின்றோம். சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலான மக்கள் மண்பானையில் பொங்கல் வைப்பதையே பெரிதும் விரும்புகின்றனர். பெரும்பாலானோர் மண்பானைகளை தேடி வந்து வாங்கிச் செல்கின்றனர். இதனால் எங்களுக்கும் ஒரு தொழிலை உருவாக்கி வருகின்றோம். இதை பாரம்பரியமாகவே நாங்கள் செய்து வருகின்றோம். நாகரீகம் வளர்ந்த காலத்தில் மண்பாண்டங்கள் முக்கியத்துவம் கொடுத்து வருவது எங்களை பெருமைப்படுத்துகிறது என்று கூறினார்.

இருப்பினும் மண்பாண்டத் தொழிலில் தொடர்ந்து மழை காரணமாக பல்வேறு எங்களுடைய தொழில் பாதிக்கப்பட்டன. எனவே, தமிழக அரசு எங்கள் மீது கருணை புரிந்து அக்கறை செலுத்த வேண்டும் எனவும் உதவி செய்திட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.


Tags:    

Similar News