திருப்புவனம்: ஊரடங்கை மீறி கூடிய ஆட்டு சந்தையில் ஆடிபிறப்பு பக்ரித் பண்டிகைக்காக குவிந்த வியாபாரிகள்

இன்று காலை 5மணிக்கே இராமேஸ்வரம் ,மதுரை நான்கு வழிசாலையில் வியாபாரிகள் ஒன்றுகூடி ஆடுகளை விற்பனை செய்தனர். தகவல் அறிந்து வந்த போலீஸார் கூட்டத்தை லேசான தடியடி நடத்தினர்.;

Update: 2021-07-13 07:51 GMT


ஊரடங்கு விதிகளை மீறி திருப்புவனத்தில் கூடிய ஆட்டுச் சந்தையில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட ஆடுகள் விற்பனை

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் செவ்வாய்கிழமைகளில் ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம் பல்வேறு மாவட்டத்தில் இருந்து குறிப்பாக மதுரை,இராமநாதபுரம் புதுகோட்டை,மேலூர் ஆகிய பகுதிகள் இருந்து வியாபாரிகள் ஆடு வாங்க வியாபாரிகள் திரண்டு வருவது வழக்கம்.

எப்போதும் திருப்புவனம் ஊருக்குள்ளேதான் ஆட்டுச் சந்தை நடைபெறும் கொரோன ஊரடங்கு உத்தரவால் ஆட்டுச் சந்தை ஊருக்குள் கூட்டத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் இன்று காலை 5மணிக்கே இராமேஸ்வரம் ,மதுரை நான்கு வழிசாலையில் வியாபாரிகள் ஒன்றுகூடி ஆடுகளை விற்பனை செய்தனர்.

தகவல் அறிந்து வந்த போலீஸார் கூட்டத்தை லேசான தடியடி நடத்தி கலைந்து போகச்செய்தனர். பின்னர் ரோட்டின் ஓரமாக சென்று விற்பனை செய்தனர் 10 கிலோ கொண்ட ஒரு ஆடு ரூ. 8ஆயிரம் முதல் 10ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன. 10கிலோ கொண்ட கிடாய் 10ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை விற்பனை செய்யபட்டது. பக்ரீத் பண்டிகை மற்றும்  ஆடிப்பிறப்பையொட்டி இந்த விலை ஏற்றம் என ஆட்டுவியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News