இளையான்குடி அருகே இரண்டாம் தவணையாக விவசாயிகளுக்கு உரம் வழங்கும் பணி
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே 2-ம் தவணையாக விவசாயிகளுக்கு உரம் வழங்கும் பணியை சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்.;
தமிழகம் முழுவதும் பருவமழை அதிகம் பெய்த நிலையில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா பகுதிகளில் விவசாயிகள் விவசாய பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் விவசாயிகளுக்கு உரம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது இரண்டாம் தவணையாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகங்களில் உரங்கள் விநியோகம் நடைபெற்று வருகிறது.
கண்டமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகத்தில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் இரண்டாம் தவணையாக விவசாயிகளுக்கு உரம் வழங்கும் பணியினை துவக்கி வைத்தார். அப்போது முன்னாள் இளையான்குடி சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன், கண்டமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் சுப. தமிழரசன் ஆகியோர் உடன் இருந்தனர்.