மணலூரில் அகழாய்வு பணிகள் நிறுத்தம்
சிவகங்கை மாவட்டம் மணலூரில் அகழாய்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.;
மணலூர் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படும் இடம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை. மணலூர் ஆகிய இடங்களில் பிப்ரவரி 13ஆம் தேதி முதல் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுவரை கீழடி, அகரம், கொந்தகையில் 850க்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் மணலூரில் இதுவரை மூன்று குழிகள் மட்டுமே தோண்டப்பட்டுள்ளன.
அந்த குழிகளை தோண்ட தோண்ட, மணல் மட்டுமே கிடைக்கப் பெற்று வருவதால் மணலூரில் தற்போது அகழாய்வு பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது