கீழடி அகழாய்வில் பாசிமணி, யானை தந்த செவ்வக வடிவ பகடை கண்டெடுப்பு
சிவகங்கை மாவட்டம் கீழடி எட்டாம் கட்ட அகழாய்வில் பாசிமணி, யானை தந்த செவ்வக வடிவ பகடை கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வில் 4 பாசி மணிகள், யானை தந்தத்தால் ஆன செவ்வக வடிவ பகடை கண்டெடுக்கப்பட்டன.
திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் ஏற்கனவே நடந்த 7 கட்ட அகழாய்வுகள் மூலம் 15,000-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. பிப்.11-ம் தேதி 8-ம் கட்ட அகழாய்வு பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் நேற்று ஒரு குழியில் 2 அடி தோண்டிய நிலையில் 4 பாசி மணிகள் கண்டெடுக்கப்பட்டன. அதில் 2 பச்சை நிறத்திலும் 2 ஊதா நிறத்திலும் இருந்தன. மேலும் யானை தந்தத்தால் ஆன செவ்வக வடிவ பகடை கண்டெடுக்கப்பட்டது. இந்த அகழாய்வில் அதிகளவில் தொல்பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தொல்லியல்துறையினர் தெரிவித்தனர்.