எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக குருவாயூரில் வழிபாடு செய்த தொழிலதிபர் !

எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக குருவாயூர் கோவிலில் அபிஷேகம் செய்து வழிபட்டார் மானாமதுரை சேர்ந்த தொழிலதிபர் அழகர்.;

Update: 2021-04-07 04:08 GMT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தொழில் செய்து வருபவர் அழகர். இவர் மூன்று தலைமுறைகளாக அதிமுக கட்சியில் இருந்து வருகிறார்.

தொழிலதிபர் அழகர் ஏழைகளுக்கு அதிமுக சார்பில் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். குறிப்பாக கொரோனா ஊரடங்கு காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அதிமுக கட்சி சார்பாக தலா 5 கிலோ அரிசி காய்கறிகள் போன்றவற்றை வழங்கி வந்தார். இவர் கட்சிப் பொறுப்பில் இல்லாவிட்டாலும், ஒரு அதிமுக தொண்டனாக உண்மையாக உழைத்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா பிறந்தநாள், எம்ஜிஆர் பிறந்தநாள் என அதிமுக விழாக்களில் ஏழைகளுக்காக தன் சொந்த செலவில் உதவிகளை செய்பவர். தற்போது நடைபெற்று முடிந்த தேர்தலில் வாக்களித்து அதே கையோடு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக வரவேண்டி நினைத்து குருவாயூர் கோவிலில் அபிஷேகம் செய்துள்ளார். இதனால் மானாமதுரை சட்டமன்ற அதிமுக தொண்டர்கள் தொழிலதிபர் அழகரை பாராட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News