இளையான்குடி வடக்கு ஒன்றியத்தில் திமுக எம்.எல்.ஏ கொடியேற்றம்
இளையான்குடி வடக்கு ஒன்றியத்தில் எம்.எல்.ஏ தமிழரசி திமுக கொடியேற்றி வைத்தார்;
இளையான்குடி வடக்கு ஒன்றியத்தில் எம்.எல்.ஏ தமிழரசி திமுக கொடியேற்றி வைத்தார்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வடக்கு ஒன்றிய திமுக சார்பாக கோட்டையூரில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் வடக்கு ஒன்றிய செயலாளருமான சுப மதியரசன் தலைமையில் கிளை செயலாளர்கள் தமாஸ், கார்சாமி ஆகியோர் முன்னிலையில் முன்னாள் அமைச்சரும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினருமான தமிழரசி ரவிக்குமார் திமுக கொடியை ஏற்றி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து தெற்கு கோட்டையூரிலும் கொடியினை ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில்.இளையான்குடி பேரூர் கழக செயலாளர் நஜ்முதீன், மாணவரணி சந்திரசேகர், மாவட்ட விவசாய அணி காளிமுத்து, கண்ணமங்கலம் கூட்டுறவு சங்கத் தலைவர் சுப தமிழரசன் ஊராட்சிமன்றத் தலைவர்கள் சைமன், குழந்தை பாண்டியன் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.