கீழடி அருங்காட்சியகம் பணியை பள்ளத்தில் இறங்கி பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

அகரத்தில் கிடைக்கப்பெற்ற புதிய மூன்று உறை கிணறுகள் இருந்த பள்ளத்தில் இறங்கி பார்வையிட்டார்.;

Update: 2021-09-21 14:23 GMT

 உறைகிணறு கிடைத்த அகரம் பகுதியை பார்வையிட்ட  சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனரெட்டி 

கீழடி அருங்காட்சியகம் அமைக்கும்  பணியை பள்ளத்தில்  இறங்கி  சிவகங்கை  மாவட்ட ஆட்சியர் மதுசூதனரெட்டி பார்வையிட்டார்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம்  அருகே கீழடி, கொந்தகை, அகரம் மற்றும் மணலூர் ஆகிய இடங்களில் ஏழாம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது.  இந்த பணியின்போது 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைக்கப்பெற்றன அதை காட்சிப் படுத்துவதாக கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அந்த பணிகளை சிவகங்கை மாவட்ட ஆட்சியர்  மதுசூதன ரெட்டி  பார்வையிட்டார்.

அப்போது,  பணிகளை  விரைந்து முடிக்க  வேண்டுமெ, ,ன அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். அதன் பிறகு, அகரத்தில்  கிடைக்கப்பெற்ற புதிய மூன்று உறை கிணறுகள் இருந்த   பள்ளத்தில்  இறங்கி பார்வையிட்டார். இந்த ஏழாம் கட்ட அகழாய்வு பணி இந்த மாத இறுதியில் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

Similar News