கீழடி அகழாய்வு தளங்கள் அகழ்வைப்பகம் கட்டும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

இங்கு கிடைத்த தொல்பொருட்களை மக்கள் பார்வையிடும் வகையில், ரூ. 12 கோடியில் கீழடியில் அகழ் வைப்பகம் கட்டப்படுகிறது.

Update: 2021-10-29 10:45 GMT

கீழடி அகழாய்வு தளங்கள்  அகழ்வைப்பகம் கட்டும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் கடந்த 2015 -ஆம் ஆண்டு முதல் 2021 -ஆம் ஆண்டு வரை ஏழு கட்டங்களாக ஆய்வுப்பணிகள் நடந்துள்ளன அதேபோல் கொந்தகை, அகரம், மணலூர் பகுதிகளிலும் ஆய்வு பணிகள் நடந்தன. இதில் முதல் மூன்று கட்ட ஆய்வு பணிகளை மத்திய தொல்லியல் துறையும் மீதமுள்ள நான்கு கட்ட பணிகளை தமிழக தொல்லியல் துறையும் மேற்கொண்டது.  உறைகிணறுகள், பாசி மணிகள், தங்க ஆபரணங்கள், சுடுமண் பொம்மைகள், செங்கல் கட்டுமானங்கள், முத்திரைகள், எடை கற்கள் என பல ஆயிரம் தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இதன்மூலம், கீழடி நகர நாகரிகம் 2600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என தெரிய வந்துள்ளது. ஏழாம் கட்ட ஆய்வு பணி செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்தது. மேலும், இங்கு கண்டறியப்பட்ட தொல்பொருட்கள் பொதுமக்கள் பார்வையிடும்  வகையில், ரூ. 12 ஒரு கோடியில் கீழடி அகழ் வைப்பகம் கட்டுமானபணி நடந்து வருகிறது.  இதுதவிர கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் என அகழாய்வு நடந்த இடங்களில் குழிகளை மூடாமல் பொதுமக்கள் பார்க்கும் வகையில் திறந்தவெளி அகழ்வைப்பகம் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.



இந்நிலையில், கீழடி அகழாய்வுத் தளங்கள் மற்றும் அகழ் வைப்பக கட்டுமானப்பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். கீழடி அகழாய்வுத் தளம் குறித்தும், அதில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்கள் குறித்தும் தொல்லியல் துறையினர் முதல்வருக்கு விளக்கினர்.

அப்போது, அமைச்சர்கள் தங்கம்தென்னரசு, கே.ஆர்.பெரியகருப்பன், ஐ.பெரியசாமி, கீதா ஜீவன், மூர்த்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News