மானாமதுரை அருகே பட்டப்பகலில் திருமண வீட்டில் திருட முயற்சி
மானாமதுரை அருகே பட்டப்பகலில் திருமண வீட்டில் திருட முயற்சித்தவர்களை கிராம மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.;
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மணலூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார். இவர் இன்று தனது மகளுக்கு திருமணம் செய்வதற்காக தனது குடும்பம் மற்றும் உறவினர்களுடன் மேலூர் அருகே உள்ள மாப்பிள்ளை ஊரான கீழையூர் கிராமத்திற்கு சென்றுள்ளார். இதை அறிந்த திருப்பூரில் வேலை பார்த்த உள்ளூரை சேர்ந்த கருப்புசாமி ,அஜித் மற்றும் திருநெல்வேலியை சேர்ந்த கருப்புசாமி மூவரும் திருமண வீட்டில் திருட திட்டம் தீட்டியுள்ளார்கள்.
திட்டப்படி பெண் வீட்டார்கள் திருமணத்திற்காக வெளியூர் செல்வதை நோட்டமிட்ட திருடர்கள் பட்டப்பகலில் திருமண வீட்டில் சன்னல் கதவை ஆயுதங்களை கொண்டு அறுத்துள்ளனர் . மேல் வீட்டில் இருந்த சிறுவன் நாய் குறைக்கும் சத்தம் கேட்கவே வெளியே வந்து பார்த்துள்ளான். சத்தம் போட்டுள்ளான்.
உடனே கிராமத்தினர் ஓடி வந்து மணலூர் கிராமத்தை சேர்ந்த கருப்புசாமி மற்றும் திருநெல்வேலி சேர்ந்த கருப்புசாமி 2பேரையும் விரட்டி பிடித்து காவல்துறையினர் ஒப்படைத்தார்கள். மேலும் தப்பி சென்று ஒரு திருடனை திருப்புவனம் காவல்துறையினர் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் திருமண வீட்டில் திருட முயன்ற சம்பவம் இப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.