மானாமதுரை அருகே முதுமக்கள் தாழியை தொல்லியல் துறை மாணவர்கள் கண்டுபிடித்தனர்

மானாமதுரை அருகே சுமார் நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் இரட்டை அடுக்கு முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.;

Update: 2021-07-26 11:48 GMT

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே முதுமக்கள் தாழியை தொல்லியல் துறை மாணவர் கண்டுபிடித்துள்ளார்.

கீழடி , கொந்தகை, அகரம், மணலூர், இதனை அடுத்து மானாமதுரை அருகே இரண்டடுக்கு முதுமக்கள் தாழி தொல்லியல் துறை மாணவர் கண்டுபிடித்துள்ளார்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் கீழடி கிராமம் அமைந்துள்ளது இங்கு ஆறு கட்டங்களாக ஆய்வுபணிகள் நடைபெற்று முடிந்து, தற்போது ஏழாம் கட்ட ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. கீழடி மட்டுமல்ல கொந்தகை, அகரம், மணலூர், போன்ற பகுதிகளிலும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

சிவகங்கை மாவட்டத்தில் இது ஒரு முக்கியமான சுற்றுலா தளமாக கருதப்படுகிறது. தற்போது மானாமதுரை அருகே சுமார் நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் இரட்டை அடுக்கு முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மானாமதுரையில் வசித்துவரும் ஆராய்ச்சி மாணவர் மீனாட்சி சுந்தரம் என்பவர், பல்வேறு பகுதிகளுக்குச் சென்று கள ஆய்வு செய்து வருகிறார்.அவ்வாறு ஆய்வு செய்ததில், மானாமதுரை அருகே உள்ள காட்டுப்பகுதியில் இரட்டை அடுக்கு கொண்ட முதுமக்கள் தாழியை கண்டுபிடித்தார்

அதுமட்டுமல்ல, பத்துக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழி அருகருகே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.ஓரே அடுக்கு முதுமக்கள் தாழி, இரட்டை அடுக்கு முதுமக்கள் தாழி, என அடுத்து அடுத்து காணப்படுகின்றது.கீழடியில் கண்டு பிடிக்காத பொருளாக தற்போது, இந்த இரட்டை அடுக்கு முதுமக்கள் தாழி புதிய கண்டுபிடிப்பாக தெரியவந்துள்ளது. மானாமதுரை பகுதியில், மண்பாண்ட தொழிலில் மிகச் சிறந்து விளங்குகிறது. மானாமதுரை பகுதியில் முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப் பட்டதால் தொல்லியல்துறையினர் இங்கு வந்து ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்தார்

Tags:    

Similar News