கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யாமல் மக்களுக்கு பால் வழங்கிய அஜித் ரசிகர்கள்
திரையரங்குகளில் வெளியானதையெடுத்து ரசிகர்கள் திரையரங்கு முன்பும் பட்டாசு வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்;
கட் அவட்டிற்கு பாலாபிஷேகம் செய்யாமல் பொதுமக்களுக்கு இலவசமாக பால் வழங்கி அஜித் ரசிகர்கள் அசத்தினர்.
மானாமதுரை தியேட்டரில் இலவசமாக பால் வாழங்கி வெடி வெடித்து கொண்டடினார் நடிகர் அஜித்குமார், இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியில் இணைந்து உருவான வலிமை திரைப்படம் இன்று பிப்.24.) திரையரங்குகளில் வெளியானது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சீனியப்பா திரையரங்குகளில் வெளியானது. இதையெடுத்து ரசிகர்கள் திரையரங்கு முன்பும் பட்டாசு வெடித்தும், கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நடிகர் அஜித் கட்அவுட்டிற்கு முதலில் பாலபிஷேகம் செய்யாமல் பொதுமக்களுக்கு இலவசமாக பால் பாக்கெட்டுகளை வழங்கினர். பின்னர் கடைசியாக கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் தங்களது உற்சாகத்தினை வெளிப்படுத்தினர். படம் தொடங்கியவுடன் திரைக்கு முன்னால் நின்று உற்சாகத்துடன் ஆட்டம் போட்டனர்.