கருப்பு பூஞ்சை நோயாளியை குணப்படுத்தி தனியார் மருத்துவமனை சாதனை
கருப்பு பூஞ்சை நோயாளியை குணப்படுத்தி தனியார் மருத்துவமனை சாதனை;
கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவரை குணப்படுத்தி தனியார் மருத்துவமனை சாதனை செய்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை சேர்ந்தவர் கண்ணன் இவருக்கு கொரானா தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் இருந்தார் அதில் இருந்து மீண்டவரை கருப்புபூஞ்சை நோய் தாக்கியது , அதனை அடுத்து மானாமதுரையில் உள்ள மாதா என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டார். இரண்டு கண்களும் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவர் ஜார்ஜ் இமானுவேல் தலைமையிலான மருத்துவ குழுவினர் தொடர் சிகிச்சையளித்தனர்.
அதன் தொடர்ச்சியாக நோயாளி கண்ணன் 18 நாட்கள் சிகிச்சைக்கு பின்பு இன்று குணமடைந்தார் . நோயால் பாதிக்கப்பட்ட இரண்டு கண்களும் நன்றாக பார்வை பெற்று விட்டதாக மருத்துவ குழுவினர் கூறினர் . நோயாளியின் உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர். கருப்புபூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சையளித்தது சவாலாக அமைந்ததாக மருத்துவ குழுவினர் தெரிவித்தனர் .