சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் வழங்கினார்;
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (26.02.2024) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகைஇ மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 319 மனுக்கள் பெறப்பட்டது. அம்மனுக்களில் தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், அறிவுறுத்தினார்.
மேலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 25 பயனாளிகளுக்கு தலா ரூ.6000வீதம் ரூ.150000 மதிப்பீட்டிலான மின்மோட்டார் பொருந்திய விலையில்லா தையல் இயந்திரங்களையும், தாட்கோ சார்பில் 02 தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் நல வாரிய உறுப்பினர் வாரிசுதாரர்களுக்கு ரூ.1000 மதிப்பிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கான ஆணை மற்றும் தொழில் கடனுக்கான ரூ.90014 மானியத்திற்கான ஆணையினையும், நபார்டு வங்கியின் சார்பில் 05 நரிக்குறவர் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தலா ரூ.70000 வீதம் ரூ.350000 மதிப்பீட்டிலான சூரிய மின்விளக்கு பொருத்தப்பட்ட பணம் இல்லாமல் பரிவர்த்தனை பொருத்தப்பட்ட நடமாடும் பல்பொருள் அங்காடியினையும் என, ஆக மொத்தம் 27 பயனாளிகள் மற்றும் 05 நரிக்குறவர் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 591014 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் வழங்கினார்.
அதனைத் தொடரந்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம்! பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் மாணவிகளுக்கு, ஆக 10 மாணவிகளுக்கு தலா ரூ.5000 மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். மேலும், பெண் குழந்தைகளை காப்போம்! பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் மூலம் பெண் குழந்தை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படத்தினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் வெளியிட்டார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வ.மோகனச்சந்திரன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.விஜய்சந்திரன், மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி, மாவட்ட பிற்ப்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்
நல அலுவலர் திருமதி ஜெயமணி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சிவக்குமார் உட்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.