சிவகங்கை மாவட்டத்தில் பகுதி நேர பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
தேசிய அளவில் சாதனை படைத்த 40 வயதுக்குட்பட்ட இறகுப்பந்து வீரர்கள், வீராங்கணைகள் ஒருவர் தேர்ந்தெடுக்கப் படவுள்ளார்;
இறகுப் பந்து வீரர்கள், வீராங்கனைகள் பகுதி நேர பயிற்சியாளராக பயிற்சி வழங்கிட தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தகவல் தெரிவித்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விளையாடு இந்தியா திட்ட நிதியுதவியில் துவக்க நிலை இறகுப் பந்து பயிற்சிக்கான , விளையாடு இந்தியா மாவட்ட மையம், சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கில் அமைக்கப்பட உள்ளது. இம்மையத்தில், 30 முதல் 100 விளையாட்டு வீராகள், வீராங்கனைகள் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு தினசரி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்த மையத்தில் பயிற்சியாளராக பயிற்சி வழங்கிட, தேசிய அளவில் சாதனை படைத்த 40 வயதுக்குட்பட்ட இறகுப்பந்து வீராகள், வீராங்கனைகள் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். விண்ணப்பதாரர் குறைந்தது ஐந்து ஆண்டுகளாகவும், தற்போது சிவகங்கை மாவட்டத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். சர்வதேச போட்டிகள் அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ அல்லது சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ அல்லது அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ சர்வதேசப் போட்டிகள் மற்றும் சீனியர் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டவராகவோ இருத்தல் வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளருக்கு 11 மாதங்களுக்கு மாதாந்திர பயிற்சிக் கட்டணமாக ரூ.25000 வழங்கப்படும். இது நிரந்தரப்பணி அல்ல. முற்றிலும் தற்காலிகமானதாகும். இதன் அடிப்படையில், வேலைவாய்ப்பு சலுகையோ நிரந்தரப் பணியோ கோர இயலாது.
இதற்குரிய விண்ணப்பத்தை, சிவகங்கை மாவட்ட விளையாட்டு அலுலவகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். 04.03.20233 மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறும். உடற்தகுதி, விளையாட்டுத்திறன், பெற்ற பதக்கங்கள் , பயிற்சி வழங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்துள்ளார்.