ஏற்காட்டில் வேரோடு சாய்ந்த ராட்சத மரம்: மீன் காட்சியகம் மேற்கூரை இடிந்து சேதம்
ஏற்காட்டில் வீசிய பலத்த காற்றுக்கு ராட்சத மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் மீன் காட்சியகத்தின் மேற்கூரை இடிந்து சேதமடைந்தன.;
சேலம் மாவட்டத்தில் இன்று பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், ஏற்காட்டில் இன்று காலை முதல் பலத்த காற்று வீசியது.
இதில் மீன் காட்சியகத்தின் அருகே இருந்த மிகவும் பழமையான ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்ததில் மீன் காட்சியகத்தின் மேற்கூரை இடிந்து சேதம் அடைந்தது.
தொடர்ந்து கட்டிடத்தின் மீது விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் சுற்றுலா பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.