ஏற்காடு மலைப்பாதையில் விழுந்த ராட்சத பாறை: அகற்றும் பணி தீவிரம்

சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பாதையில் விழுந்த ராட்சத பாறையை, வெடி வைத்து அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.;

Update: 2021-11-13 06:30 GMT

சேலம் மாவட்டம் ஏற்காட்டில்  இரண்டு மாதங்களாக மழை பெய்தவண்ணமே உள்ளது. இந்த மழையின்  காரணமாக,  கடந்த மாதம் ஏற்காட்டின் முக்கிய சாலையான ஏற்காடு மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு ஏற்காட்டின் மற்றொரு பாதையான, குப்பனூர் சாலையில் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டது. பின்னர் பெய்த மழையால், குப்பனூர் பாதையிலும் நிலச்சரிவு ஏற்பட்டு,  சாலை சரி செய்யப்பட்டது. தற்போது இந்த இரண்டு சாலையிலும்,   கன ரக வாகனகள் செல்ல தடை விதிக்கப்பட்டு பேருந்துகள் மற்றும் இலகுரக வாகனகள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  நேற்று இரவு ஏற்காடு மலைப்பாதையில் உள்ள 40 அடி பாலத்தின் அருகில் உள்ள சாலையில்,  நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த நிலச்சரிவில் 900 டன் எடை கொண்ட ராட்சச பாறை,  சாலையில் உருண்டு விழுந்தது. நெடுஞ்சாலை துறையினர் , சாலையில் கிடைக்கும் ராட்சச பாறையை  வெடிவைத்து தகர்க்கும் பணியில், தற்போது நெடுஞ்சாலை துறையினர் மற்றும் காவல் துறையினருடன் இணைந்து  ஈடுபட்டு வருகின்றனர்.  வெடி வைத்த பிறகு போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டு பிறகு பாறைகளை அகற்றி சீரமைத்த பிறகே, போக்குவரத்து அனுமத்திக்கப்பட உள்ளது.

Tags:    

Similar News