முழு ஊரடங்கால் சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடிய ஏற்காடு சாலை

ஞாயிறு முழு ஊரடங்கு காரணமாக சுற்றுலா பயணிகள் இல்லாமல் ஏற்காடு சாலை முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

Update: 2022-01-09 09:30 GMT

வெறிச்சோடி காணப்பட்ட ஏற்காடு சாலை.

ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிவார்கள். 

தொடர் விடுமுறை காரணமாக கடந்த சில நாட்களாகவே ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்ட நிலையில், இன்றைய தினம் தமிழகம் முழுவதும் கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகை இன்றி ஏற்காட்டின் பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. 

அண்ணா பூங்கா, படகு இல்லம், சுற்று சூழல் பூங்கா மற்றும் ரோஜா தோட்டம் என அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன. மேலும் ஏற்காட்டில் அவசர தேவைக்காக மருந்தகங்கள் தவிர இதர கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.


Tags:    

Similar News