ஏற்காட்டில் வீட்டில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
ஏற்காட்டில் கள்ளத்தனமாக வீட்டில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.;
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் அரங்கம் கிராமத்திற்கு உட்பட்ட பெரியமதுர் பகுதியில் வசித்து வரும் வெங்கடாசலம் என்பவர் கள்ளத்தனமாக, வீட்டில் நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக, ஏற்காடு காவல் நிலைய ஆய்வாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், காவல் நிலைய ஆய்வாளர் ரஜினி தலைமையிலான போலீசார், அவரது வீட்டில் சோதனை செய்த போது வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கி சிக்கியது. இதையடுத்து நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார், வெங்கடாசலத்தை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.